/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு எம்.எல்.ஏ., அறிவுரை
/
எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு எம்.எல்.ஏ., அறிவுரை
ADDED : நவ 19, 2025 02:30 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டியில், அ.தி.மு.க., சார்பில் நியமிக்கப்பட்ட பி.எல்.ஏ., - 2 ஓட்டுச்சாவடி முகவர்களுடன், வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து, நேற்று, ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு சென்று, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த(எஸ்.ஐ.ஆர்.,) படிவம் அனைவருக்கும் வழங்கப்படுகிறதா, ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன், முகவர்கள் செல்கின்றனரா என, ஆய்வு செய்தார்.
அப்போது, 'எஸ்.ஐ.ஆர்., குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்ப
டுத்த வேண்டும். மக்கள் படிவத்தை நிரப்பி, சம்பந்தப்பட்ட அலுவலர்களி
டம் ஒப்படைக்க உதவ வேண்டும்' என, அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பன
மரத்துப்பட்டி ஒன்றிய செய
லர்களான, கிழக்கு பாலச்சந்திரன், மேற்கு ஜெகநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

