தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சின்ன வெங்காயம் விலை 'இரட்டை சதம்' அடித்தது

சின்ன வெங்காயம் விலை 'இரட்டை சதம்' அடித்தது

சின்ன வெங்காயம் விலை 'இரட்டை சதம்' அடித்தது


ADDED : நவ 19, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: சேலம் மாவட்ட தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு சின்ன வெங்காயம் வரத்து, 40 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

இதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது. நேற்று சின்ன வெங்காயம் கிலோ, 100 முதல், 200 ரூபாய் வரை விற்பனையானது. குறிப்பாக முதல் தர வெங்காயம் கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனையானது. பெரிய வெங்காயம் கிலோ, 60 முதல், 80 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறியும், கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 10 முதல், 15 ரூபாய் வரை, கணிசமாக விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து காய்கறி மொத்த வியாபாரி சீனிவாசன் கூறியதாவது:

கடந்த ஆண்டில் சின்ன வெங்காயம் கிலோ, 10 முதல், 20 ரூபாய் வரையே விற்றது. இதனால் அதன் சாகுபடி வெகுவாக குறைந்தது. தற்போது வரத்தும் குறைத்துவிட்டது. கடந்த செப்டம்பர் முதல் கிலோ, 60 முதல், 70 ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்தது. படிப்படியாக உயர்ந்து, தற்போது கிலோ அதிகபட்சம், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு முன், 2023ல் சின்ன வெங்காயம் கிலோ, 150 முதல், 170 ரூபாய் வரை சென்றதே அதிகபட்சமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us