/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆயுள் தண்டனை முடிந்து திரும்பிய தந்தை 2ம் திருமணம் செய்ததால் மகன் தற்கொலை
/
ஆயுள் தண்டனை முடிந்து திரும்பிய தந்தை 2ம் திருமணம் செய்ததால் மகன் தற்கொலை
ஆயுள் தண்டனை முடிந்து திரும்பிய தந்தை 2ம் திருமணம் செய்ததால் மகன் தற்கொலை
ஆயுள் தண்டனை முடிந்து திரும்பிய தந்தை 2ம் திருமணம் செய்ததால் மகன் தற்கொலை
ADDED : அக் 31, 2025 12:52 AM
சேலம், சேலம், அய்யந்திருமாளிகை முதல் தெருவை சேர்ந்த முத்துமணி மனைவி சுசீலா. இவர்களது மகன் மணிகண்டன், 21. கடந்த, 20 ஆண்டுக்கு முன், சுசீலா கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, முத்துமணி மற்றும் மணிகண்டனின் பாட்டி மாதம்மாளை கைது செய்தனர். இருவருக்கும் நீதிமன்றம், ஆயுள் தண்டனை வழங்கியது. தண்டனை முடிந்து, இருவரும் வெளியே வந்தனர்.
தொடர்ந்து முத்துமணி, 2ம் திருமணம் செய்து கொண்டு, குடும்பம் நடத்தி வருகிறார். இதில் வேதனை அடைந்த மணிகண்டன், நேற்று முன்தினம் மாலை, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாதம்மாள் புகார்படி, கன்னங்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
நர்சிங் மாணவி விபரீதம்
சேலம், கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்த, சங்கர் மகள் இந்துமதி, 19. அரியானுாரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., நர்சிங் படித்தார்.
கடந்த, 28 மாலை, இந்துமதிக்கும், அவரது தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் வேதனை அடைந்த இந்துமதி, வீட்டில் துாக்கிட்டுக்கொண்டார். அவரை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில், பெற்றோர் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

