/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற மகன் மாயம்: சேலத்தில் தாய் தீக்குளிக்க முயற்சி

ADDED : பிப் 11, 2025 07:35 AM
சேலம்: சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அடுத்த ஏகாபுரத்தை சேர்ந்த மூதாட்டி அழகம்மாள், 70. நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த இவர், தன் மீது பெட்ரோல் ஊற்றிக்-கொண்டு தீக்குளிக்க
முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூதாட்டியை தடுத்து மீட்டனர். அதன்பின்,
போலீசா-ரிடம் மூதாட்டி கூறியதாவது:என்னுடைய மகன் பச்சியண்ணன், 45, விவசாயம் செய்து வந்தார். கடந்தாண்டு மார்ச், 4ல்,
திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர்
கிடைக்காததால், மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தேன். ஓராண்டாகியும் என் மகனை
கண்டுபிடித்து தர-வில்லை. பலமுறை வலியுறுத்தியும் போலீசார் கண்டுகொள்ள-வில்லை.
மருமகள் விஜயா மற்றும் பேரன், பேத்திகளும், பச்சி-யண்ணணை தேடி வருகின்றனர். இருந்த ஒரு
மகனும் காணாமல் போய்விட்டதால், அந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்று, தீக்-குளிக்க வந்தேன்.
என் மகனை கண்டுபிடிக்காமல் இங்கிருந்து போகமாட்டேன்.இவ்வாறு கூறினார்.சேலம் டவுன் போலீசார், மகுடஞ்சாவடி போலீசாரை தொடர்பு கொண்டு, இந்த வழக்கில் மேல்
நடவடிக்கை எடுக்கும்படி பரிந்-துரைத்து, மூதாட்டியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.