/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காணிக்கை நகையை தரம் பிரித்து அழுக்கு உள்ளிட்டவை அகற்றம்
/
காணிக்கை நகையை தரம் பிரித்து அழுக்கு உள்ளிட்டவை அகற்றம்
காணிக்கை நகையை தரம் பிரித்து அழுக்கு உள்ளிட்டவை அகற்றம்
காணிக்கை நகையை தரம் பிரித்து அழுக்கு உள்ளிட்டவை அகற்றம்
ADDED : மே 30, 2024 07:20 AM
சேலம் : சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ தலைமை வகித்தார்.
மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள், 5 கிலோ, 190 கிராம் தங்க நகைகள் செலுத்தி இருந்தனர். இதில் கோவில் உபயோகத்துக்கு தேவையற்ற கற்கள், அரக்கு அழுக்கு உள்ளிட்டவற்றை நீக்கும் பணி நடந்தது. இப்பணி இன்றும் நடக்கிறது. அதன் முடிவில் தங்க எடை தெரிய வரும். சேலம் மண்டல இணை கமிஷனர் சபர்மதி, நகை சரிபார்ப்பு துணை கமிஷனர் விமலா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி, நகை மதிப்பீட்டு வல்லுனர் தர்மராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.இந்த நகைகள், அரசு ஆணைக்கு பின் ஸ்டேட் வங்கி மூலம் மும்பை அரசு உருக்காலைக்கு அனுப்பி உருக்கப்பட்டு, ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்படும். அதற்குரிய தங்க பத்திரங்கள், கோவிலுக்கு கிடைக்கும். இதில் இருந்து கிடைக்கும் வட்டி, கோவில் வருவாயில் சேர்க்கப்படும் என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.