/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விலங்கு வேட்டை தடுக்க தனிப்படை 'ரோந்து'
/
விலங்கு வேட்டை தடுக்க தனிப்படை 'ரோந்து'
ADDED : மே 05, 2025 02:52 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலை, கல்வராயன்மலை, ஜருகுமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் புள்ளிமான், கடமான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட விலங்குகளை, சிலர் வேட்டையாடுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க, வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவுப்படி தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேர்வராயன் தெற்கு, வடக்கு, டேனிஷ்பேட்டை, ஏற்காடு, வாழப்பாடி, மேட்டூர் வனச்சரகங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆத்துார் கோட்டத்தில் தம்மம்பட்டி, கருமந்துறை உள்ளிட்ட வனச்சரகங்களில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விலங்கு வேட்டையில் ஈடுபடுவோருக்கு அபராதம், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.