/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாக்குச்சாவடிகளில் தீவிர திருத்த சிறப்பு முகாம்
/
வாக்குச்சாவடிகளில் தீவிர திருத்த சிறப்பு முகாம்
ADDED : நவ 23, 2025 01:12 AM
சேலம், சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில், நேற்று தீவிர திருத்தம் குறித்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. கமிஷனர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட, சேலம் வடக்கு, தெற்கு சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்வதில், சந்தேகம் இருப்பவர்களுக்காக, நேற்று மாநகராட்சியின் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.இன்றும் நடக்கும்
இம்முகாமில், வாக்குச்சாவடி அலுவலர்கள், படிவங்களை பூர்த்தி செய்ய உதவி செய்யவும், படிவங்களை திரும்ப பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜெயராணி மெட்ரிக் பள்ளி, குகை மாநகராட்சி பள்ளி ஆகிய மையங்களில், கமிஷனர் இளங்கோவன் நேரில் ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்.

