/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கிட்னி' விற்பனை மோசடி விவகாரம் தி.கோட்டில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
/
'கிட்னி' விற்பனை மோசடி விவகாரம் தி.கோட்டில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
'கிட்னி' விற்பனை மோசடி விவகாரம் தி.கோட்டில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
'கிட்னி' விற்பனை மோசடி விவகாரம் தி.கோட்டில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு
ADDED : ஜூலை 23, 2025 02:25 AM
திருச்செங்கோடு, ஜூலை 23
கிட்னி விற்பனை மோசடி தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர், நேற்று திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம், குமார
பாளையம் பகுதிகளில், ஏழை விசைத்தறி தொழிலாளர்களிடம் தானம் என்ற பெயரில், 'கிட்னி' பெறப்பட்டு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து மோசடி செய்து வருவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க, நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து, சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவினர், பள்ளிப்பாளையம் பகுதியில் விசாரணை நடத்தினர்.
கிட்னி விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, 'கிட்னி தானம் செய்தவர்கள், அதை வாங்கியவர்கள் குறித்து முறையான ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறதா' என்பது குறித்து விசாரிக்க, தமிழக அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
அதில், தமிழ்நாடு சுகாதார அமைப்பின் திட்ட இயக்குனர் வினித், மருத்துவ சட்ட துணை இயக்குனர் மீனாட்சி சுந்தரேசன், மருத்துவ சட்ட டி.எஸ்.பி., சீதாராமன் ஆகியோர் உள்ளனர். அவர்கள், நேற்று காலை, 11:30 மணிக்கு, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் வந்தனர்.
அங்கு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள், அரசு விதிகளுக்கு உட்பட்டு கிட்னி தானம் செய்ததற்கான முறையான ஆவணங்கள் உள்ளதா என, ஆய்வு செய்தனர். பின், மதியம், 2:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டனர். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தி, நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன், குமாரபாளையம் தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.