/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை பல இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்
/
நாளை பல இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்
ADDED : பிப் 18, 2024 10:07 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில் நாளை சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடக்க உள்ளன.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் அறிக்கை: நடப்பு நிதியாண்டின், 2ம் அரையாண்டு வரையான, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, காலியிடம், தொழில் வரிகள், குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை மக்கள் செலுத்துவதற்கு வசதியாக, சிறப்பு வரிவசூல் முகாம்கள், பிப்., 19ல்(நாளை) நடக்க உள்ளன.
சூரமங்கலம் மண்டலத்தில் குரங்குச்சாவடி வார்டு அலுவலகம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கந்தம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டி வளாகம், பெரிய கிணத்து தெரு வார்டு அலுவலகம், பால் மார்க்கெட் வார்டு அலுவலகம்.
அஸ்தம்பட்டி மண்டலத்தில், சின்னதிருப்பதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சீரங்கப்பாளையம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், அழகாபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், வெங்கடப்ப செட்டி சாலை அம்மா உணவக வளாகம், கோட்டை கல்யாண மண்டபம்.
அம்மாபேட்டை மண்டலத்தில் மன்னார்பாளையம் பிரிவு சுகாதார அலுவலகம், பாவடி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், தாதம்பட்டி நடுநிலைப்பள்ளி, குமரகிரி பேட்டை ரேஷன் கடை வளாகம்.
கொண்டலாம்பட்டி மண்டலத்தில் காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபம், லைன்மேடு உருது துவக்கப்பள்ளி, கருங்கல்பட்டி கிளை நுாலகம், பெருமாள் கோவில் மேடு ஸ்ரீகாளியம்மன் மாரியம்மன் அரங்கம், கிருத்திகா அபார்ட்மென்ட், கோவிந்தம்மாள் நகர் ஆகிய இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடக்க உள்ளன.
மேலும் அன்று மாநகராட்சியில் உள்ள அனைத்து வரி வசூல் மையங்களும், காலை, 9:00 முதல், 4:00 மணி வரை செயல்படும். மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.