/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
/
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 09, 2024 06:48 AM
சேலம் : சேலம், கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் வெற்றி பெற்றனர்.
இதனால், 100 சதவீத தேர்ச்சி பெற்று, பள்ளி சாதனை படைத்துள்ளது. அதில் கணித அறிவியல் பிரிவை சேர்ந்த மாணவி திவ்யதர்ஷினி, 582 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பிடித்தார். கணித உயிரியல் பிரிவு மாணவி ஷபா பாத்திமா, 581, சரண்யா, 575 மதிப்பெண்கள் பெற்று, 2, 3ம் இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். கணிதம், இயற்பியலில் தலா, 3 பேர், கணித அறிவியலில், 4 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியரை, பள்ளி தலைவர் ஆண்டியப்பன், செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் குமார், இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், 'எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளி இயற்கை சூழல், சிறந்த கட்டமைப்பு, பாதுகாப்பான வாகன வசதிகளை கொண்டு படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குகிறது. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,யில் மாணவர்களை சேர்ப்பதற்கு தனி கவனம் செலுத்தி வருகிறது. 'நீட்', ஜே.இ.இ., ஆகிய நுழைவு தேர்வுகளுக்கு தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. 2023- - 2024 கல்வியாண்டுக்கு, 6 முதல், பிளஸ் 2 வரை சேர்க்கை நடக்கிறது' என்றனர்.