/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் எம்.பி., தொகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
/
சேலம் எம்.பி., தொகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
சேலம் எம்.பி., தொகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
சேலம் எம்.பி., தொகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
ADDED : ஜூலை 16, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம், சேலம் எம்.பி., தொகுதிக்குட்பட்ட, வீரபாண்டி, சென்னகிரி ராஜபாளையம் ருக்மணி அம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து மக்களை வரவேற்று, அவர்கள் மனுக்களுடன் தெரிவித்த கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது உடனடி தீர்வு காண்பதாக, எம்.பி., உறுதி அளித்தார். இதில், மாவட்ட துணை கலெக்டர் பொன்மணி, வீரபாண்டி ஒன்றிய செயலர் வெண்ணிலா, துறை சார்ந்த அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், மக்கள்
பங்கேற்றனர்.