தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாநில தடகளம் இன்று இறுதிப்போட்டி

மாநில தடகளம் இன்று இறுதிப்போட்டி

மாநில தடகளம் இன்று இறுதிப்போட்டி


ADDED : நவ 02, 2026 02:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2026 02:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், 67வது குடியரசு தின தடகளப்போட்டி, மாநில அளவில், சேலம், பெரியார் பல்கலை மைதானத்தில் கடந்த, 28ல் தொடங்கி, இன்று முடிகிறது.

இதில், 38 பள்ளிகள், தமிழக விளையாட்டு மேம்பாடு ஆணைய வீரர்கள் என, 5,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். 14, 17, 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், 100, 200, 400 மீ., ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதல், குண்டு, தட்டு, ஈட்டி எறிதல், தொடர் மற்றும் தடை தாண்டும் ஓட்டம் உள்பட, 17 வகை போட்டிகள் நடக்கின்றன. முதல் மூன்று நாட்கள் ஆண்களுக்கு போட்டி நடந்தது. நேற்று முன்தினம் பெண்களுக்கு போட்டி தொடங்கியது. 2,400 பேர் பங்கேற்றனர். இரு நாட்கள் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தது. ஓட்டம், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில், வீராங்கனையர் திறமைகளை வெளிப்படுத்தினர். நிறைவு நாளான இன்று, இறுதிப்போட்டி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us