/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மின் பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டால் போராட்டம்'
/
'மின் பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டால் போராட்டம்'
'மின் பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டால் போராட்டம்'
'மின் பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விட்டால் போராட்டம்'
ADDED : டிச 08, 2024 01:28 AM
மேட்டூர், டிச. 8-
மேட்டூர் அணை கட்டுமான பணிக்கு தேவையான இரும்பு தளவாடங்களை தயாரிக்க, ஆங்கிலேய அரசு சார்பில், அணை அடிவாரத்தில், 1926ல் பணிமனை தொடங்கப்பட்டது. காலப்போக்கில் தமிழக பொதுப்பணித்துறை, தொடர்ந்து மின்வாரியத்திடம் வந்தது. தற்போது தனி மேற்பார்வை பொறியாளர் கட்டுப்பாட்டில் இயங்கும் பணிமனையில், நிர்வாகம், களப் பணியில், 24 பெண்கள் உள்பட, 206 பேர் மட்டும் பணிபுரிகின்றனர்.
ஆனால் கட்டுமான பணிக்கு சமீபகாலமாக புது தளவாடங்களை, மின் கழகம் கொள்முதல் செய்யாததால் ஊழியர்கள் பணிக்கு வந்து விட்டு, இயந்திரங்களை மட்டும் சுத்தம் செய்து விட்டு செல்கின்றனர். இதனால் ஊழியர்களை வேறு பணியிடங்களுக்கு மாற்றவும், பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம் விடவும், மின்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், பணிமனைக்கு சென்று ஊழியர்களின் குறைகளை கேட்டு மனுக்களை வாங்கினார். பின், பணிமனையை தனியாருக்கு ஒப்பந்தம்விட்டால் போராட்டம் நடத்துவோம் என, ஊழியர்களிடம் கூறிவிட்டு சென்றார்.