/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெண்ணெய் தாழி சேவையில் பெருமாள் வீதி உலா
/
வெண்ணெய் தாழி சேவையில் பெருமாள் வீதி உலா
ADDED : மே 13, 2024 07:24 AM
சேலம் : சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த, 5ல் தொடங்கியது. தினமும் காலை, மாலையில், பெருமாள் விதவித வாகனங்களில் காட்சி அளிக்கிறார். 8ம் நாளான நேற்று, சவுந்தரராஜர், கண்ணன் திருக்கோலத்தில் மடியில் வெள்ளி வெண்ணெய் பானையுடன் வெண்ணெய் தாழி சேவையில் எழுந்தருளச்செய்து, திருவீதி உலா நடந்தது.
தொடர்ந்து ஸ்ரீமத் ராமானுஜர் அவதார திருநட்சத்திரம், எம்பெருமானார் உற்சவத்தின் நிறைவு நாளையொட்டி, உடையவர் ராமானுஜருக்கு சிறப்பு பூஜை செய்து பிரபந்த சாற்றுமுறை பாராயணம் செய்யப்பட்டது. மாலையில் பெரிய குதிரை வாகனத்தில் பெருமாள் தீப அலங்காரத்தில் உலா வந்தார். இன்று தேரோட்டம், தீர்த்தவாரி, சக்கர ஸ்நானம் நடக்கிறது. நாளை திருக்கல்யாண உற்சவம், 15ல் கலச ஸ்தாபன திருமஞ்சனம், 16ல் சப்தாபரணம், 17ல் ஊஞ்சல் உற்சவத்துடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறும்.