/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நீட் ' தேர்வால் விரக்தி மாணவி தற்கொலை
/
'நீட் ' தேர்வால் விரக்தி மாணவி தற்கொலை
ADDED : ஏப் 04, 2025 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி:சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், பெரியமுத்தியம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், 43; தனியார் நிறுவன ஊழியர். இவர்கள் மகள் சத்யா, 18. கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த சத்யா, நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை.
நடப்பாண்டில் வெற்றி பெற, 10 மாதங்களாக ஜலகண்டாபுரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் படித்து வந்தார். கடந்த, 31ல், வீட்டில் இருந்த சத்யா, எறும்பு பவுடரை குடித்துள்ளார்.
சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று காலை உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

