/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவ பேரவையினர் பதவியேற்பு
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவ பேரவையினர் பதவியேற்பு
செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவ பேரவையினர் பதவியேற்பு
செந்தில் பப்ளிக் பள்ளியில் மாணவ பேரவையினர் பதவியேற்பு
ADDED : ஜூலை 12, 2025 12:47 AM
சேலம், சேலம், செந்தில் பப்ளிக் பள்ளியில், 2025 - -26ம் ஆண்டு மாணவ பேரவை உறுப்பினர் பதவியேற்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். மாணவ பேரவை தலைவராக, பிளஸ் 2 வகுப்பை சேர்ந்த குருசரண், மாணவ பேரவை தலைவியாக, சவி ஜெயின், தொடர்ந்து விளையாட்டு உள்ளிட்ட அணிகளின் தலைவர், துணை தலைவர்கள் பொறுப்பேற்றனர்.
இதையடுத்து, 'நீட்' தேர்வில், தேசிய அளவில் இடம் பிடித்த மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில், 25,000 ரூபாய், -ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, 50,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 2024 - -25ம் ஆண்டில், 10, பிளஸ் 2 தேர்வில், மாவட்ட அளவில் சாதனை படைத்தவர்களுக்கு தலா, 50,000 ரூபாய், -100 மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரியர்களுக்கு தலா, 10,000 ரூபாய் வீதம், 1,75,000 பரிசாக வழங்கப்பட்டது. விளையாட்டுகளில் மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்வியில் உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்வி, கலை, விளையாட்டுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களை பாராட்டி, நிர்வாக உறுப்பினர்கள், 25,00,000 ரூபாய் பரிசு வழங்கினர்.
செந்தில் நிறுவன குழுமத்தலைவர் செந்தில் கந்தசாமி, செயலர் தனசேகர், துணைத்தலைவர் மணிமேகலை, தாளாளர் தீப்தி, முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், நிர்வாக அலுவலர் பிரவீன்குமார், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி பங்கேற்றனர்.