ADDED : ஜூலை 20, 2026 01:28 AM

அ நிறம் | அளவு
சங்ககிரி: சங்ககிரி ஒன்றியம் காவேரிப்பட்டி, மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து அரசிராமணி செட்டிப்பட்டியை இணைக்கும்படி, சாலை உள்ளது. ஆனால் மழையில் கரைந்து ஜல்லி கற்களாக சிதிலமடைந்து கிடக்கின்றன.
அதில் பள்ளிக்கு மாணவ, மாணவியரை விட வரும் பெற்றோர் அவதிக்கு ஆளா-கின்றனர். சில நேரங்களில், இருசக்கர வாகனங்களில் இருந்து தடு-மாறி விழுந்து, பெற்றோருடன் மாணவ, மாணவியரும் காயம் அடைகின்றனர். மக்களும் பயன்படுத்துவதால் அச்சாலையை உடனே சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
