/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டடம் சேதத்தால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிக்கு மாற்றம்
/
கட்டடம் சேதத்தால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிக்கு மாற்றம்
கட்டடம் சேதத்தால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிக்கு மாற்றம்
கட்டடம் சேதத்தால் மாணவ, மாணவியர் வேறு பள்ளிக்கு மாற்றம்
ADDED : அக் 24, 2025 01:32 AM
சங்ககிரி, சங்ககிரி, கத்தேரி ஊராட்சி வளையக்காரனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 77 பேர் படிக்கின்றனர். சில நாட்களாக பெய்த மழையால் கடந்த, 16ல், அப்பள்ளி வகுப்பறை கட்டடங்களின் முகப்பு பகுதியின் மேற்பகுதியில் உள்ள கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதனால் வகுப்பறையை சீரமைக்கக்கோரி, 17ல், மாணவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. அன்று, 7 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர்.
இந்நிலையில், 18 முதல் நேற்று முன்தினம் வரை பள்ளிக்கு விடுமுறையால் செயல்படவில்லை. நேற்று பள்ளியை திறக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து, அருகே கத்தேரியில் உள்ள தொடக்கப்பள்ளியில், வளையக்காரனுார் பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி வளையக்காரனுார் மாணவர்களுக்கு, கத்தேரி பள்ளியில் வகுப்பு நடந்தது.
இதுகுறித்து பி.டி.ஓ., முத்துசாமியிடம் கேட்டபோது, ''வளையக்காரனுார் பள்ளி சீரமைப்பு பணி நடப்பதால், அப்பள்ளி மாணவர்கள் கத்தேரி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்,'' என்றார்.

