/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நீர்வரத்து 45,500 கனஅடியாக உயர்வு 13 மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கை
/
நீர்வரத்து 45,500 கனஅடியாக உயர்வு 13 மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கை
நீர்வரத்து 45,500 கனஅடியாக உயர்வு 13 மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கை
நீர்வரத்து 45,500 கனஅடியாக உயர்வு 13 மாவட்டத்துக்கு வெள்ள எச்சரிக்கை
ADDED : அக் 24, 2025 01:33 AM
மேட்டூர், மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 45,500 கனஅடியாக அதிகரித்ததால், 13 மாவட்டங்களில், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த, 20 மதியம், நடப்பாண்டில், 7ம் முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. அதில் இருந்து, 16 கண் மதகு வழியே, 8வது முறை உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை, 35,500 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, மாலை, 6:00 மணிக்கு, 45,500 கன அடியானது. அதில், 1,000 கனஅடி பாசனம், உபரியாக, 21,300 கனஅடி என, 22,300 கனஅடி நீர் அணை, சுரங்க மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக வெளியேற்றப்பட்டது. அதேநேரம், 12,700 கனஅடியாக இருந்த, 16 கண் மதகு உபரிநீர் திறப்பு, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 22,700 கனஅடியாகவும் அதிகரிக்கப்பட்டது. தவிர, 500 கனஅடி நீர், கால்வாய் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. இதன்மூலம் அணைக்கு வரும், 45,500 கனஅடி நீரும் காவிரியில் வெளியேற்றப்பட்டது.
இருப்பினும் நீர்வரத்து, 66,000 கனஅடி வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலுார், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, மயிலாடுதுறை என, 13 டெல்டா மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, அந்தந்த கலெக்டர் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

