/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுரங்கப்பாலத்துக்கு எதிர்ப்பால் மேம்பாலம் அமைக்க ஆய்வு
/
சுரங்கப்பாலத்துக்கு எதிர்ப்பால் மேம்பாலம் அமைக்க ஆய்வு
சுரங்கப்பாலத்துக்கு எதிர்ப்பால் மேம்பாலம் அமைக்க ஆய்வு
சுரங்கப்பாலத்துக்கு எதிர்ப்பால் மேம்பாலம் அமைக்க ஆய்வு
ADDED : செப் 22, 2024 04:58 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே காட்டுக்கோட்டை வழியே, சேலம் -- விருதாசலம் அகல ரயில் பாதை செல்கிறது. அதில் காட்டுக்கோட்டை ஊராட்சி வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவில் அருகே ரயில்வே கேட் உள்ளது.
அந்த கேட்டை அகற்றிவிட்டு, 9.96 கோடி ரூபாயில், சுரங்கப்பாலம் அமைக்க ரயில்வே துறை மூலம் கட்டுமானப்பணி நடந்தது. அதற்கு காட்டுக்கோட்டை, சதாசிவபுரம், சாத்தப்பாடி, புனல்வாசல்,
ஒதியத்துார், வளையமாதேவி, சார்வாய்புதுார், சார்வாய் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று, ரயில்வே துறையினர், மேம்பாலம் அமைப்பதற்கான சாத்திக்கூறு, அதன் பாதை குறித்து ஆய்வு செய்து அளவீடு பணி மேற்கொண்டனர்.
இதுகுறித்து ரயில்வே துறையினர், 'அளவீடு பணி மேற்கொண்ட பின், மேம்பாலம் அமைக்க திட்டமதிப்பீடு தயாரித்து அனுப்பப்படும். அதற்கான நிதி பெறப்பட்டதும், மேம்பாலம் அமைக்கப்படும்' என்றனர்.