/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி விறுவிறு
/
துணை சுகாதார நிலைய கட்டுமானப் பணி விறுவிறு
ADDED : ஏப் 21, 2024 02:24 AM
வீரபாண்டி:சேலம்,
சிவதாபுரம், பச்சைபட்டினி மாரியம்மன் கோவில் அருகே, 1983ல்
கட்டப்பட்டு தாய்சேய் நல விடுதி செயல்பட்டுவந்தது. அதை சுற்றி
பத்திரப்பதிவு அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்டவை பயன்பாட்டில்
உள்ளன.
அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும்படி, சாக்கடை
கால்வாய் கட்ட, 5 ஆண்டுக்கு முன், தாய் சேய் நல விடுதி முன்பு பள்ளம்
தோண்டப்பட்டது.இதனால் கர்ப்பிணியர், இளம் தாய்மார்கள், அதை கடந்து வர முடியாத நிலை ஏற்பட்டு தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டது.
அதற்கு
பின் முறையான பராமரிப்பின்றி தாய்சேய் நல விடுதி கட்டடம் விரிசல்
விழுந்தது. சுற்றிலும் புதர்மண்டி காணப்பட்டது. இதையடுத்து, அந்த
கட்டடம் பொக்லைன் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
உடனே அதே இடத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி தொடங்கி நடந்து வருகிறது.தற்போது,
50 சதவீத பணி முடிந்துள்ளது. 6 மாதங்களில் கட்டி முடிக்க இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள்
தெரிவித்தனர்.

