/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுவர் பூங்காவுக்கு கண்காணிப்பு கேமரா ஜலகண்டாபுரம் டவுன் பஞ்., தீர்மானம்

ADDED : அக் 01, 2024 07:13 AM
ஜலகண்டாபுரம்: சிறுவர் பூங்காக்களுக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, டவுன் பஞ்., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜலகண்டாபுரம் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் கூட்டம், தி.மு.க,வை சேர்ந்த தலைவர் காசி தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் அசோக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
இதில், டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட, 8, 10 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் உள்ள சிறுவர் பூங்காவில் குழந்தைகள் நலன் கருதி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுதல், வாரச்சந்தையில் புதிய பெண்கள் கழிப்பிடம் கட்டப்படும். 15வது நிதிக்குழுத் திட்டத்தின் கீழ், கொள்முதல் செய்யப்படும் கழிவுநீர் அகற்றும் வாகனம் நிறுத்துவதற்கு தேவையான செட் அமைக்கவும், திரவக்கழிவு மேலாண்மை திட்டம் அமைந்துள்ள பகுதி மற்றும் வாகன பாதுகாப்பு கருதி அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், துணை முதல்வர் பொறுப்பேற்றி-ருக்கும் உதயநிதி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மின்-சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் பணி சிறக்க வாழ்த்துவது என்பது உள்ளிட்ட, 10 தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.