/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா தேரோட்டம்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா தேரோட்டம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா தேரோட்டம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா தேரோட்டம்
ADDED : பிப் 11, 2025 07:29 AM
வீரபாண்டி: பிரசித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச திரு-விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (பிப்.,11) நடக்கிறது.
சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள, காளிப்பட்டி கந்த-சாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த, 7ல் கொடியேற்றத்-துடன் துவங்கியது. நேற்று மதியம் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம்,
இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடக்கிறது.
இதற்காக இரண்டு தேர்களை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்கள்
மற்றும் வண்ண வண்ண துணி-களால் அலங்கரித்து வட கயிறுகள் பூட்டி தேரோட்டத்துக்கு தயார்
நிலையில் கோவில் முன் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று காலை, 6:00 மணிக்கு சொர்க்கவாசல்
திறக்கப்பட்டு, மூலவர் கந்த-சாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான
மங்கள பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்து ராஜ அலங்காரத்தில் கந்தசாமி
அருள்பாலிப்பார்.மதியம் 2:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் கந்தசாமி சர்வ
அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருள்வார். மதியம், 3:00 மணிக்கு முதலில் விநாயகர் தேரோட்டமும்,
தொடர்ந்து கந்தசாமியின் பெரிய தேரை அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து
கோவிலை வலம் வருவர்.இரவு, 8:00 மணிக்கு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறும். நாளை (பிப்.,12)
சந்தனகாப்பு அலங்காரம், இரவு முத்துப்பல்லக்கில் வீதி உலா, 13ல் சத்தாபரண
ஊர்வலத்-தையொட்டி இரவு 7:00 மணிக்கு சுவாமி மயில் வாகனத்திலும், 8:00 மணிக்கு மின் அலங்கார
சப்பரத்திலும், 9:00 மணிக்கு மலர் சப்பரத்திலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு
அருள்பா-லிப்பார். அதிகாலை 3:00 மணிக்கு வாண வேடிக்கையுடன் சத்தா-பரண மகாமேரு ஊர்வலம்
நடக்கவுள்ளது. 14ல் வசந்த உற்சவத்-துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறும்.ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன், பரம்பரை அறங்காவலர் சரஸ்வதி சதாசிவம்
உள்ளிட்ட கட்டளை உற்சவதாரர்கள் செய்து வருகின்றனர்.

