/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு மாதிரி பள்ளியில் தமிழ் மன்ற விழா
/
அரசு மாதிரி பள்ளியில் தமிழ் மன்ற விழா
ADDED : ஆக 07, 2024 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அரசு மாதிரிப்பள்ளியில் தமிழ் மன்ற விழா நேற்று நடந்தது.
முதுகலை தமிழ் ஆசிரியர் ஜெய்கணேஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர், தமிழில் பிழையின்றி எழுதவும், வாசிக்கவும், தமிழ் மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும், மாதந்தோறும் தமிழ் சார்ந்த தலைப்புகளில் போட்டி நடத்தப்படுகிறது. நேற்று, 'தமிழின் தொன்மையும் சிறப்பும்' தலைப்பில் பேச்சுப்போட்டி நடந்தது. அதில் மாணவ, மாணவியர் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி மேலாண் குழுவினர் பரிசு வழங்கி பாராட்டினர். தமிழ் ஆசிரியர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.