/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தேக்வாண்டோவில் பங்கேற்க மாணவிக்கு ஆசிரியர்கள் உதவி
/
தேக்வாண்டோவில் பங்கேற்க மாணவிக்கு ஆசிரியர்கள் உதவி
தேக்வாண்டோவில் பங்கேற்க மாணவிக்கு ஆசிரியர்கள் உதவி
தேக்வாண்டோவில் பங்கேற்க மாணவிக்கு ஆசிரியர்கள் உதவி
ADDED : நவ 10, 2024 01:09 AM
தேக்வாண்டோவில் பங்கேற்க
மாணவிக்கு ஆசிரியர்கள் உதவி
பனமரத்துப்பட்டி, நவ. 10-
பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி கோணமடுவை சேர்ந்த யுவராஜ் - குணவதியின் மகள் சாகித்யா, 9. குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், 4ம் வகுப்பு படிக்கிறார். கடந்த ஆகஸ்டில் திருச்சியில் மாநில அளவில் நடந்த தேக்வாண்டோவில், சப் - ஜூனியர், 16 கிலோ பிரிவில் தங்கம் வென்றார். இதன்மூலம் வரும், 21ல் அரியானாவில் நடக்க உள்ள தேசிய தேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஆனால் மாணவியின் பெற்றோர், கட்டட கூலி தொழிலாளர் என்பதால் போதிய பண வசதியின்றி, மகளை அரியானா அனுப்ப தயங்கினர். இதை அறிந்த குரால்நத்தம் பள்ளி ஆசிரியர்கள் தெய்வநாயகம், கோமதி, ராஜா, தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் ஆகியோர், மாணவியின் பெற்றோரை நேற்று பள்ளிக்கு அழைத்தனர். தொடர்ந்து அவர்களிடம், மாணவி அரியானா செல்வதற்கு, பயண, உணவு செலவாக, 5,000 ரூபாயை வழங்கினர்.