/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவருக்கு ஓராண்டு சிறை
/
லாரி மோதி வாலிபர் சாவு: டிரைவருக்கு ஓராண்டு சிறை
ADDED : ஜன 28, 2025 07:16 AM
சேலம்: லாரி சக்கரத்தில் தலை நசுங்கி, வாலிபர் உயிரிழந்த வழக்கில், டிரைவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 30, இவர் தனது மனைவி நந்தினியுடன், கடந்த 2023, அக்., 2, மதியம் 1:40 மணிக்கு, பனமரத்துப்பட்டி பிரிவு, பாலம் ஒட்டிய சர்வீஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அதே திசையில் பின்னால் வந்த லாரி மோதியதில், சதீஷ்குமார் கீழே விழுந்தார். அவர் தலை மீது லாரி ஏறியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். நந்தினி காயமடைந்தார்.
இதுகுறித்து, மல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த ஏற்காடு, மேல் கோம்பைகாடு பகுதியை சேர்ந்த முருகேசன், 52, என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கு சேலம் ஜே.எம்.எண் - 6 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், முருகேசனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட் பாபு தீர்ப்பளித்தார்.

