ADDED : ஆக 08, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், ராணிப்பேட்டை, புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் வரும் 15 மாலை, 5:30 மணிக்கு தேர் திருவிழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் கொடியேற்று விழா நடந்தது.
ஆத்துார் பங்குத்தந்தை அருளப்பன், திண்டிவனம் முப்பணி மைய இயக்குனர் பிரிட்டோபாக்யராஜ் கொடியேற்றி, திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நேற்று தனிப்பாடல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தனி நடனம், கட்டுரை போட்டி, குழு நடன நிகழ்ச்சிகள் நடந்தன.