/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் நகைகள் அளவீடு செய்து பாதுகாப்பு அறையில் வைத்து 'சீல்'
/
கோவில் நகைகள் அளவீடு செய்து பாதுகாப்பு அறையில் வைத்து 'சீல்'
கோவில் நகைகள் அளவீடு செய்து பாதுகாப்பு அறையில் வைத்து 'சீல்'
கோவில் நகைகள் அளவீடு செய்து பாதுகாப்பு அறையில் வைத்து 'சீல்'
ADDED : டிச 30, 2025 01:22 AM

இடைப்பாடி: இடைப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் நிர்-வாகிகள் மீது கொடுக்கப்பட்ட புகாரால், 21 ஆண்டுக்கு முன், அக்கோவில் நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறைக்கு மாறி-யது. அப்போது முதல், அப்பகுதி மக்களுக்கும், அறநிலையத்-துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்கிறது. கோவிலுக்கு சொந்தமான நகைகளில் பாதி, கோவில் வளா-கத்தின் ஒரு அறையிலும், மீதி அறநிலைத்துறை அதிகாரிகள் வசமும் உள்ளன.
கோவில் வளாக அறையில் இருந்த ஆபரணங்களை கணக்கீடு செய்ய, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நேற்று, அறநிலையத்துறை துணை கமிஷனர் விமலா உள்ளிட்ட அதிகாரிகள், கோவில் வளாகத்துக்கு வந்தனர். கொங்க-ணாபுரம், மகுடஞ்சாவடி, இடைப்பாடி, சங்ககிரி போலீசார், 100க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து பரம்பரை தர்மகர்த்தா கெளதம் ரத்தினவேலு பொறுப்பில், கோவில் வளாக பாதுகாப்பு அறையில் இருந்த தங்கம், வெள்ளி ஆபரணங்களை அளவீடு செய்யும் பணி நடந்-தது. அதில் கிரீடம், அரைஞாண் கயிறு, காப்பு, காசு, வேல் என, 2 கிலோ, 600 கிராம் தங்கம், கிரீடம், அரைஞாண் கயிறு, காப்பு, வேல் என, 21 கிலோ, 950 கிராம் வெள்ளி இருந்தன. மேலும் அறையில் இருந்த சில்லரை காசுகள், 63,000 ரூபாய் இருந்தது. பழைய கால நாணயங்களான ஓட்டை காலனா, பித்தளை செம்பு காசுகள், அலுமினிய காசுகள், கணக்கீடு செய்யப்படாமல் மீண்டும் அதே அறையில் வைக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டது.

