தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/சோதனை ஓட்டமாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட்

சோதனை ஓட்டமாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட்

சோதனை ஓட்டமாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட்


ADDED : அக் 21, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்,:சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மாநகராட்சி திடலில், சோதனை ஓட்டமாக தற்காலிக பஸ் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டது. அங்கு போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது:சென்னை செல்லும் பயணியருக்கு, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டு, 60 தனியார் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து சென்னை, கோவை, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு, 465 பஸ்கள், பிற மாவட்டங்களுக்கு, 1,197 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 'ஏசி' பஸ்கள், 92 அடங்கும். தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்கு வரவேற்பு இருந்தால் தீபாவளிக்கும் அமல்படுத்தப்படும். மேலும் இங்கு அடிப்படை வசதிக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஆர்.ஓ., ரவிக்குமார், போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us