/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை ஐயப்பன் கோவிலில் முகூர்த்தக்கம்பம் நடல்
/
நாளை ஐயப்பன் கோவிலில் முகூர்த்தக்கம்பம் நடல்
ADDED : நவ 09, 2025 05:04 AM
சேலம்:சேலம், சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நாளை முகூர்த்த கம்பம் நடுதலுடன் மண்டல பூஜை, மகர ஜோதி தரிசன விழா தொடங்க உள்ளது.
இதுகுறித்து, சாஸ்தா நகர் ஐயப்பன் கோவில் ஐயப்பா டிரஸ்ட் தலைவர் நடராஜன் கூறியதாவது: ஐயப்பன் கோவிலில் நடப்பாண்டு மண்டல பூஜை நவ., 10(நாளை) காலை, 6:00 முதல், 7:00 மணிக்குள் முகூர்த்த கம்பம் நடப்பட்டு தொடங்க உள்ளது. மண்டல பூஜை நடக்கும் நவ., 17 முதல், 2026 ஜன., 15 வரை, தினமும் மதியம், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மேலும் மண்டல பூஜை காலத்தில், தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். மக்களுக்கு இடையூறு இல்லாமல் அவர்கள் வாகனங்களை நிறுத்த, டிரஸ்ட் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் கோவிலில் நடக்கும் அனைத்து பூஜைகளிலும் பங்கேற்று, ஐயப்பன் அருள் பெற அழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பெருமாள், சிவக்குமார் உடனிருந்தனர்.

