/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மகன், மகளை கொன்ற 'கொடூர' தந்தை கைது
/
மகன், மகளை கொன்ற 'கொடூர' தந்தை கைது
ADDED : பிப் 21, 2025 07:37 AM
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, 74.கிருஷ்ணாபுரம், காந்தி நகரை சேர்ந்தவர், ஆட்டோ டிரைவர் அசோக்குமார், 45. இவர் நேற்று முன்தினம், அவரது மனைவி, இரு மகள், ஒரு மகனை அரிவாளால் வெட்டிவிட்டு, மர்ம நபர்கள் வெட்டியதாக நாடகமாடினார். இதில் மூத்த மகள் விஜயதாரணி, 13, மகன் அருள்பிரகாஷ், 6, உயிரிழந்தனர்.
மனைவி தவமணி, 38, மற்றொரு மகள் அருள்பிரகாஷினி, 10, சேலம் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெங்கவல்லி போலீசார் விசாரணையில், கள்ளக்காதலை தட்டிக்கேட்டதில் ஆத்திரமடைந்து, அசோக்குமாரே கொலை செய்தது தெரிந்தது. அவரும் காயம் ஏற்படுத்திக்கொண்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் அசோக்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.