sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'கோவிந்தா' கோஷம் முழங்க கும்பாபிேஷகம்

/

'கோவிந்தா' கோஷம் முழங்க கும்பாபிேஷகம்

'கோவிந்தா' கோஷம் முழங்க கும்பாபிேஷகம்

'கோவிந்தா' கோஷம் முழங்க கும்பாபிேஷகம்


ADDED : ஜூன் 09, 2025 03:45 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 03:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சின்ன கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த, 5ல் தொடங்கியது. 3 நாட்-களாக, 5 கால யாகசாலை பூஜைகள் நடந்து, நேற்று காலை, 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது.

பட்டாச்சாரியார்கள், யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் கலசங்-களை தலையில் சுமந்து, மேள தாளம் முழங்க, கோவிலை, 3 முறை வலம் வந்தனர். 7:50 மணிக்கு கோவிலை சுற்றி திரண்டி-ருந்த பக்தர்களின், 'கோவிந்தா... கோவிந்தா... வரதா... வரதா...' கோஷங்கள் அதிர, வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசங்கள் மீது, புனிதநீரை ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைத்தனர். 8:30க்கு மூலவர் ஸ்ரீதேவி, பூமிநிளா தேவி சமேத வரதராஜர், பெருந்தேவி தாயார், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், புதி-தாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தன்வந்திரி பகவான், சிறு திரு-வடி ஆஞ்சநேயர், பெரிய திருவடி கருடாழ்வார் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீரால் அபிேஷகம் செய்து, சர்வ அலங்காரத்துடன் தீபாராதனை காட்டி பூஜை செய்-யப்பட்டது.மாலை, 4:00 மணிக்கு உற்சவர் வரதராஜருடன், ஸ்ரீதேவி, பூமி-நிளா தேவி திருக்கல்யாண உற்சவம் பட்டாச்சாரியார்களால் நடத்தி வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மணக்கோலத்தில் வரதராஜரை வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்ப-ரத்தில் ஸ்ரீதேவி, பூமிநிளா தேவியர்களுடன், சர்வ அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வா-கிகள், பட்டாச்சாரியார்கள், கட்டளை உற்சவதாரர்கள் செய்திருந்-தனர். சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலை-மையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடு-பட்டனர்.

லட்சுமி நாராயண பெருமாள்

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. அங்கு கடந்த மே, 25ல், கும்பாபிஷேக விழா தொடங்கி-யது. நேற்று வாசுதேவ புண்ய யாகம் உள்ளிட்டவை நடந்த பின், யாகசாலையில் இருந்து பல்வேறு புண்ய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை தலையில் சுமந்தபடி கோபுர கல-சத்துக்கு கொண்டு வந்து, கலசம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், 'கோவிந்தா' கோஷம் எழுப்பிய-படி தரிசனம் செய்தனர்.

அதேபோல் நரசிங்கபுரம் கூட்ரோடு திருவரங்கம் கோவிலில் சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்க, கோவில் முக்கியஸ்-தர்கள் புனித நீரை தலையில் சுமந்தபடி, கோவிலை சுற்றி ஊர்வ-லமாக வந்து, கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபி-ஷேகம் நடத்தப்பட்டது. பின் கோபுர கலசம், மூலவர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின் பக்தர்களுக்கு புனித நீரை தெளித்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் மகுடஞ்சாவடி, அ.புதுார் கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேற்று மட்டும் சேலம் மாவட்டத்தில், 30க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்தது.






      Dinamalar
      Follow us