/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'முதல்வரின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்'
/
'முதல்வரின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்'
'முதல்வரின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்'
'முதல்வரின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்'
ADDED : ஏப் 20, 2025 01:43 AM
சேலம்:
தி.மு.க.,வின், சேலம் மத்திய மாவட்ட இளைஞரணியின் ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர் அறிமுக கூட்டம், சேலத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மத்திய மாவட்ட செயலர், அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: இளைஞர் அணியினர் ஒவ்வொரு ஓட்டுச்சாவடி வாரியாக பணிகளை மேற்கொண்டு, முதல்வரின் சாதனை திட்டங்களை, மக்கள் மத்தியில் எடுத்துரைக்க
வேண்டும். பேரூர், கிளை வாரியாக இளைஞர் அணிக்கு பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக செய்தி தொடர்பு இணை செயலர் தமிழன் பிரசன்னா, இளைஞரணியின் செயல்பாடு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தார். இளைஞரணி துணை செயலர் சீனிவாசன், மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்பிரசன்னா, மாநகர் இளைஞரணி அமைப்பாளர் சரவணன், மாநகர் செயலர் ரகுபதி உள்பட பலர் பங்கேற்றனர்.