ADDED : அக் 07, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: ஆத்துார் அருகே வீரகனுாரை சேர்ந்த, 15 வயது மாணவி, 10ம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
ஆத்துார் மகளிர் போலீசார், மருத்துவ மனைக்கு வந்து விசாரித்-ததில், 24 வயதுடையவர் மாணவியை காதலித்ததும், அவருடன் திருமணமானதும் தெரிந்தது. இதனால் அவர் மீது குழந்தை திரு-மண தடுப்புச்சட்டம், போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.