sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவர்களை படைப்பாளியாக உருவாக்குவதே ஜெய்ராம் கலை அறிவியல் கல்லுாரியின் நோக்கம்

/

மாணவர்களை படைப்பாளியாக உருவாக்குவதே ஜெய்ராம் கலை அறிவியல் கல்லுாரியின் நோக்கம்

மாணவர்களை படைப்பாளியாக உருவாக்குவதே ஜெய்ராம் கலை அறிவியல் கல்லுாரியின் நோக்கம்

மாணவர்களை படைப்பாளியாக உருவாக்குவதே ஜெய்ராம் கலை அறிவியல் கல்லுாரியின் நோக்கம்


ADDED : மே 31, 2024 03:04 AM

Google News

ADDED : மே 31, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் ஜெய்ராம் கலை, அறிவியல் கல்லுாரி, ராஜேந்திர பிரசாத்தால், 2001ல், கிராமப்புற மக்களின் கல்வி மேம்பாட்டுக்கு, சின்னதிருப்பதியில் உருவாக்கப்பட்டது. மாணவர்களுக்கு தரமான கல்வியை கற்பிப்பதோடு மட்டுமின்றி ஒழுக்கம், பண்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

போட்டிகள் நிறைந்த சூழலில் நவீன மயமாக்கப்பட்ட வகுப்புகளுடன் கல்வியில் புதுமையான கற்றல் வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்படுகிறது. படிப்பு, பயிற்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை முழுமையாக வழங்கி மாணவர்களை படைப்பாளியாக உருவாக்குவதே இக்கல்வி நிறுவன நோக்கம்.

இங்கு, 100 சதவீத ஸ்மார்ட் வகுப்பறைகள், எல்.சி.டி., புரஜெக்டர் மூலம் அனுபவமிக்க பேராசிரியர்கள் பாடங்களை கற்பிக்கின்றனர். அனைத்து செய்முறை பயிற்சி வகுப்புகளும், நேரடி காணொலி மூலம் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. அறிவியல் துறைசார்ந்த மாணவர்கள் அனைவரும் தனித்தனியே செய்முறை பயிற்சி மேற்கொள்ளும்படி, அதற்குரிய உபகரணங்கள் உள்ளன. மாணவர்கள், கல்லுாரி வர முடியாத நாட்களில், வகுப்புகளில் நடத்தப்படும் பாடங்களை, அதற்கென உருவாக்கப்பட்ட, 'ஜெய்ராம் செயலி' மூலம் பார்த்தும், கேட்டும் பயன்பெறலாம்.

கல்லுாரி நுாலகத்தில், 17,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள், இதழ்கள் உள்ளன. லட்சக்கணக்கான புத்தகங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதி உள்ளது. ஆங்கிலத்திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. தவிர அப்டிடியூட் உள்ளிட்ட பல்வேறு திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் அனைத்து தடங்களில் பஸ் வசதி உள்ளது. கடந்த கல்வியாண்டில் நடந்த வளாகத்தேர்வில், 100 சதவீத வேலைவாய்ப்பு வசதியை மாணவர்கள் பெற்றுள்ளனர். பெற்றோர், மகன், மகள்களை, வீட்டிலிருந்தே பார்ப்பதற்கு, அனைத்து வகுப்பறைகள், பஸ், கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட கலையரங்கம், கருத்தரங்கம், ஹைடெக் ஸ்மார்ட் போர்டுடன் அமைக்கப்பட்டுள்ளன. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. கல்லுாரி விடுதி, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. கல்லுாரி தகவல்களை, www.jairaminfo.in என்ற வலைதளத்தில் பார்த்து கொள்ளலாம். கல்லுாரியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும், ஜெய்ராம் காலேஜ் எனும் யு டியூப் சேனல் வழியே தெரிந்துகொள்ளலாம்.






      Dinamalar
      Follow us