/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த செவிலியை
/
ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த செவிலியை
ADDED : செப் 03, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார், திண்டமங்கலம், நடுத்தெருவை சேர்ந்தவர் சூர்யா, 23. சேலத்தில் ஆட்டோ டிரைவராக பணிபுரிகிறார். சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் திவ்யதர்ஷினி, 21. சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.
இருவரும் காதலித்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து நேற்று, தொளசம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். முன்னதாக திவ்யதர்ஷினியை காணவில்லை என அவரது பெற்றோர், போலீசில் புகார் அளித்திருந்தனர். இருவரது பெற்றோருக்கு தகவல் அளித்து தொளசம்பட்டி போலீசார் பேச்சு நடத்தி அனுப்பிவைத்தனர்.