/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
/
குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 24, 2024 01:30 AM
குடிநீர் வினியோகம் இல்லாததால் ஊராட்சி அலுவலகம் முற்றுகை
வீரபாண்டி, அக். 24-
சேலம், பெரிய சீரகாபாடி ஊராட்சி ஏரிக்காடு, எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் காளியம்மன் கோவில் வீதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, 6 மாதங்களாக குடிநீர் மட்டுமின்றி, ஆழ்துளை குழாய் தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை.
எம்.ஜி.ஆர்., நகரில், 800 லிட்டர் கொள்ளளவில் மினி தொட்டி மட்டும் உள்ளது. அதில் நிரப்பப்படும் தண்ணீர், 2 மணி நேரத்தில் தீர்ந்து விடுகிறது. இதனால், அரை கி.மீ., சென்று, ஊராட்சி அலுவலகம் எதிரே உள்ள குழாயில் இருந்து தண்ணீர் பிடித்து வருகின்றனர்.
தவிர, இப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் வருவதில்லை; டேங்க் ஆப்பரேட்டர் முறையாக தண்ணீர் திறந்து விடுவதில்லை என குற்றம்சாட்டியிருந்தனர். இதுகுறித்து ஊராட்சி செயலர், தலைவர் மட்டுமின்றி கிராம சபை கூட்டத்திலும் முறையிட்டு நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று காலை, 10:30 மணிக்கு பெரிய சீரகாபாடி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கேயே அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீரபாண்டி ஒன்றிய பி.டி.ஓ., தனபால்(கி.ஊ.,) உள்ளிட்ட அதிகாரிகள், பேச்சு நடத்தி, 10 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.