/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கும்மி, கோலாட்டம் ஆடிய பெண்கள் கத்தி போட்டபடி வீரக்குமாரர்கள் ஊர்வலம்

ADDED : மார் 31, 2025 02:12 AM
சேலம்: யுகாதி பண்டிகை எனும் தெலுங்கு புத்தாண்டையொட்டி, சேலம், பொன்னம்மாபேட்டை, தில்லை நகர், அதன் சுற்று வட்-டாரங்களில் வசிக்கும் தெலுங்கு தேவாங்க சமூகத்தினர், அவர்க-ளது குல தெய்வமான சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று அதிகாலை முதலே குவிந்தனர்.
அங்கு மூலவர் அம்மன், ராமலிங்கேஸ்வரருக்கு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபி ேஷகம் செய்தனர். அம்-மனுக்கு புஷ்ப பாவாடை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்-தனர்.
ராமலிங்கேஸ்வரருக்கு பரிவட்டம் கட்டி ராஜ அலங்காரத்தில், மகா தீபாராதனையுடன் பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவில் முன் கூடிய சிறுமியர் முதல் வயதான பெண்கள் வரை, பாரம்பரிய கும்மி, கோலாட்டம் ஆடி, புத்-தாண்டு வாழ்த்தை பரிமாறிக்கொண்டனர்.
அதேபோல் சிறுவர் முதல் பெரியவர் வரை, 'ஓம்சக்தி, பராசக்தி' கோஷம் முழங்க, கூரான கத்தியால் தோள் பட்டைகளில் கீறிய-படி வீரக்குமாரர்கள் முக்கிய வீதிகள் வழியே, சக்தியை ஊர்வல-மாக அழைத்து வந்தனர்.
மேலும் நல்ல மழை பொழிந்து மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, ஏராளமான பெண்கள், பால், தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மதியம் அனைவருக்கும் அன்ன-தானம் வழங்கப்பட்டது.