/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'பல்கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக ஆசிரியர் சங்கம் இருக்க வேண்டும்'
/
'பல்கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக ஆசிரியர் சங்கம் இருக்க வேண்டும்'
'பல்கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக ஆசிரியர் சங்கம் இருக்க வேண்டும்'
'பல்கலை வளர்ச்சிக்கு உறுதுணையாக ஆசிரியர் சங்கம் இருக்க வேண்டும்'
ADDED : டிச 18, 2024 07:12 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், அதன் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். தொடர்ந்து சக பேராசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பொதுக்குழு கூட்டம் நடந்தது.
அதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை விரைந்து பெற்றுத்தருதல்; காலக்கெடு முடிந்தும் ஆய்வை நிறைவு செய்யாத ஆராய்ச்சியாளர்களுக்கு, சிறப்பு அனுமதி வழங்குதல்; மாணவ மாணவியர் பயன்பெற, மேலும் இரு பஸ்களை கொள்முதல் செய்து, புது வழித்தடத்தில் இயக்க கேட்டுக்கொள்ளுதல்; நுழைவாயிலில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க, நடை மேம்பாலம் அமைக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தல் என்பன உள்பட, 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து பல்கலை, உயர்கல்வி வளர்ச்சிக்கு, 'ஆசிரியர் சங்கத்தின் பங்கு' தலைப்பில் தேசிய அளவில் கருத்தரங்கு நடந்தது. அதை தொடங்கி வைத்து, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் பேசுகையில், ''நானும் பல்கலை சங்கத்தில் இருந்தபோது பல நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளேன். நான் பெரியார் பல்கலை துணைவேந்தராக பொறுப்பேற்ற பின், இதுவரை, ஆசிரியர் சங்கம் சார்பில் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. சங்கம் பல்கலை வளர்ச்சி, மாணவர்களின் நலனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,'' என்றார்.
தமிழக வேளாண் பல்கலை ஆசிரியர் சங்க நிறுவன செயலர் முருகப்பன், சங்க வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். சங்க பொதுச்செயலர் நித்யானந்தன், துணைத்தலைவி சிந்து உள்ளிட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.