/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சில் பையை கிழித்து ரூ.1.10 லட்சம் திருட்டு
/
பஸ்சில் பையை கிழித்து ரூ.1.10 லட்சம் திருட்டு
ADDED : அக் 16, 2024 07:25 AM
சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர் அருணாசலம், 65; இவரது பேத்தி ஸ்வேதா. ஈரோடு மாவட்டம் கோபியில் தனியார் கல்லுாரியில் பி.பார்ம்., நான்காமாண்டு படிக்கிறார். கல்லுாரி கட்டணம் செலுத்த, சின்ன சேலத்தில் இருந்து சேலம் புது பஸ் ஸ்டாண்டுக்கு, நேற்று முன்தினம் மதியம் இருவரும் வந்தனர்.
கோபி செல்லும் அரசு பஸ்சில் ஏறி, இருக்கை மேலே உள்ள இடத்தில் பேக்கை வைத்தனர். சிறிது நேரத்துக்கு பின் பார்த்தபோது பேக் கிழிக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த, 1.10 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. அருணாசலம் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளின் அடிப்படையில், களவாணியை தேடி வருகின்றனர்.