/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை பறித்தவருடன் துணிச்சலுடன் போராடிய பெண்
/
நகை பறித்தவருடன் துணிச்சலுடன் போராடிய பெண்
ADDED : நவ 05, 2024 01:41 AM
மல்லுார், நவ. 5-
மல்லுாரில், துணிச்சலுடன் பெண் போராடியதால், பட்டப்பகலில் தங்க சங்கிலி பறிக்க முயன்றவர் போலீசாரிடம் சிக்கினார்.
மல்லுார், மாரியம்மன் கோவில் அருகே குடியிருக்கும் ஆஜிதாபேகம், 50, சீலநாயக்கன்பட்டியில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர், நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த கருப்பூர் வெள்ளாளப்பட்டி திவாகர், 25, என்பவர் ஆஜிதா பேகம் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அவர், சங்கிலியை இறுக்கமாக பிடித்து கொண்டு விட மறுத்துள்ளார்.
அவரை, தரையில் தள்ளிவிட்டு கன்னத்தில் மாறி, மாறி திவாகர் தாக்கியுள்ளார். ஆனாலும், சங்கிலியை விடாமல், கூச்சலிட்டபடி போராடினார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து திவாகரை பிடித்து மல்லுார் போலீசில் ஒப்படைத்தனர்.
கன்னத்தில் விழுந்த அடியை தாங்கியபடி, ஆஜிதா பேகம் துணிச்சலுடன் போராடி, இரண்டு பவுன் சங்கிலியை பறிக்க விடாமல் தடுத்துள்ளார்.
மல்லுார் போலீசார் விசாரணைக்கு நடத்தி, திவாகரை நேற்று கைது செய்தனர்.