/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம் இன்று கும்பாபிஷேக விழா
/
தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம் இன்று கும்பாபிஷேக விழா
தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம் இன்று கும்பாபிஷேக விழா
தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம் இன்று கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 31, 2025 02:43 AM
தாரமங்கலம்: தாரமங்கலம், கீழ் சின்னாக்கவுண்டம்பட்டியில் உள்ள செம்பு மாரியம்மன் கோவில் கும்பா-பிஷேகம், இன்று காலை, 9:15 முதல், 10:15 மணிக்குள் நடக்கி-றது. இதை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. ஜலகண்டாபுரம் சாலையில் உள்ள வேலாயுதசாமி கோவிலில் தொடங்கிய ஊர்வலம், கைலாசநாதர் கோவில், பஸ் ஸ்டாண்ட் வழியே, கோவிலுக்கு சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம், முளைப்
பாரி எடுத்துச்சென்றனர்.
தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அதில் கோபுர கலசங்கள் வைத்து, ஊர்வலமாக சென்று கோவிலில் நிறைவு செய்தனர். மாலையில் கணபதி வழிபாடு, பல்வேறு பூஜைகள் செய்து முதல்கால யாகபூஜை நடந்தது. தொடந்து கோபுரத்தில் கோபுர கலசம் பொருத்தி, சுவாமி பிரதிஷ்டை, மருந்து சாற்று உள்ளிட்டவை செய்யப்பட்டது. விழாக்குழுவினர், பக்தர்கள், மக்கள் தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை சுப்ரபாதம், இரண்டாம் கால யாகபூஜை, உபகார பூஜை உள்ளிட்டவைக்கு பின் கும்பாபிேஷகம் நடக்கிறது.