அனல் மின் ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
அனல் மின் ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
ADDED : ஜூலை 20, 2026 01:21 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூரில், 840, 600 மெகாவாட் அனல்மின் நிலையங்களில், 20க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்களில், 500க்கும் மேற்-பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் 8 முதல், 15 ஆண்டுகளாக வேலை செய்கின்றனர். அவர்கள், மின் கழ-கத்தில் பணிநிரந்தரம் செய்யக்கோரி, கடந்த, 15 மாலை முதல், அனல்மின் நிலையம் நுழைவாயில், அதன் உட்பகுதியில் அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மதுரையில் மின் கழக அமைச்சர் நிர்மல்குமா-ருடன் தொழிற்சங்க நிர்வாகிகள், ஒப்பந்த ஊழியர்கள் பேச்சு நடத்தினர்.அதில் ஏற்பட்ட முடிவின்படி, 5ம் நாளாக நேற்று காலை, 11:00 மணி வரை நடந்த போராட்டத்தை கைவிட்டு, ஒப்பந்த ஊழி-யர்கள் பணிக்கு திரும்பினர்.
