/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ்காரர் வீடுகளில் புகுந்த திருடர்கள் ஏமாற்றம்
/
போலீஸ்காரர் வீடுகளில் புகுந்த திருடர்கள் ஏமாற்றம்
ADDED : பிப் 03, 2025 07:17 AM
ஆத்துார்: ஆத்துார் அருகே கல்பகனுார் ஊராட்சி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி, 45, பச்சமுத்து, 42. இவர்கள், பெரம்பலுார் மாவட்ட போக்குவரத்து பிரிவு, போலீஸ்காரராக பணிபுரிகின்றனர். இவர்களின் வீடுகள் அருகருகே உள்ளன. இருவரது குடும்பத்தினரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றனர்.
இதை அறிந்த மர்ம நபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, வீட்டின் பூட்டை உடைத்து பீரோ உள்ளிட்டவற்றையும் உடைத்துள்ளனர். அதேபோல் அதே பகுதியில் உள்ள, அண்ணாமலை, 51, என்பவர் வீட்டிலும் புகுந்துள்ளனர். ஆனால், 3 வீடுகளிலும், பணம், நகை இல்லாத நிலையில், பீரோவில் இருந்த துணிகள் மட்டும் கலைந்து கிடந்தன. ஆத்துார் ஊரக போலீசார், நேற்று, 3 வீடுகளிலும் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

