/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருவண்ணாமலை வாலிபர் முதலிடம்
/
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருவண்ணாமலை வாலிபர் முதலிடம்
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருவண்ணாமலை வாலிபர் முதலிடம்
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திருவண்ணாமலை வாலிபர் முதலிடம்
ADDED : ஜன 22, 2024 10:47 AM
மேட்டூர்: மேட்டூரில் நேற்று நடந்த மாரத்தான் போட்டியில் தேசிய அளவில் பங்கேற்ற வீரர்கள் ரொக்க பரிசசை தட்டி சென்றனர்.
மேட்டூர் நகர ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று காலை மேட்டூர் அரசு மேல்நிலைபள்ளி மைதானத்தில் துவங்கியது.
மொத்தம், 12 கி.மீ., 5 கி.மீ., மாணவ, மாணவியர், இளைஞர்கள், முதியவர்கள், மாற்று திறனாளிகள் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ராகவன், மேட்டூர் டி.எஸ்.பி., மரியமுத்து, எம்.எல்.ஏ., சதாசிவம் நேற்று காலை, 6:30 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
போட்டி முடிவில், 12 கி.மீ., ஆண்கள் பிரிவில் திருவண்ணாமலை சக்திவேல், பெங்களூரு சுரேஷ்குமார், உத்தரபிரதேச மாநிலம், சவுரவ்தாமா முதல் மூன்று இடங்களை பிடித்தனர். பரிசு தொகை முறையே, 5,000, 4,000, 3,000 ரூபாய் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் அந்தியூர் வித்யா, திருச்செங்கோடு விஷ்ணுபிரியா, மேட்டூர் பத்மபிரியா முதல் மூன்று இடங்களை பிடித்து பரிசு தொகை பெற்றனர்.
இதில், 5 கி.மீ., பிரிவில் மேட்டூர் பாலசந்தர், கோவை விக்டர் சாமுவேல் ராஜன், ஜலகண்டபுரம் ராமச்சந்திரன், மாணவியர் பிரிவில் மேட்டூர் அடுத்த கோனுார் அரசு உயர்நிலைபள்ளி மாணவியர் வசுமிதா, ஹரிணி, சத்யபிரியா முதல் மூன்று இடங்களை பெற்றனர்.
மாற்று திறனாளிகள் பிரிவில் சேலம் சின்னத்துரை, விஜய், மேட்டூர் சரவணன் வெற்றி பெற்றனர். இந்திய பாரா ஒலிம்பிக் வீரர் சஞ்சிவ் கண்ணன் பரிசு வழங்கினார்.
ஏற்பாடுகளை மேட்டூர் அணை நகர ரோட்டரி சங்க தலைவர் சந்திரமோகன், செயலாளர் முரளி கேசவன், பொருளாளர் பார்த்திபன் செய்தனர்.