/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை மாத்திரை விற்ற மூவர் கும்பலுக்கு 'காப்பு'
/
போதை மாத்திரை விற்ற மூவர் கும்பலுக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 29, 2025 01:11 AM
சேலம், சேலம் கன்னங்குறிச்சி போலீசார், நேற்று மாலை, 5:00 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னக்கொல்லப்பட்டி, வர்மா கார்டன் ஆர்ச் அருகே கும்பலாக இருந்த மூவரை பிடித்து, சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் அவர்களிடம், போதை மாத்திரை மற்றும் சிரஞ்சிகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் பள்ளப்பட்டியை சேர்ந்த ஹரிஹரன், 26, பொன்னம்மாபேட்டையை சேர்ந்த சதீஸ்குமார், 33, ஜாகீர் அம்மாபாளையம் சூரியபிரகாஷ், 24, என்பது தெரிந்தது. அதையடுத்து போதைமாத்திரை, சிரஞ்சிகளை பறிமுதல் செய்து மூவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: புகாரின் பேரில், கும்பலை பிடிக்க ரோந்து சென்ற போது, மூவரும் வசமாக சிக்கினர். அவர்களிடம் போதை மாத்திரை, சிரஞ்சிகளை வாங்கி சென்ற ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த இரு மாணவர்களையும் கையும், களவுமாக பிடித்தோம். அவர்கள் தலா. 5 டேப்பன்டால், 100 மி.கிராம் போதைமாத்திரை, சிரஞ்சியும் வைத்திருந்தனர். அந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து, ஊசி மூலம் உடல் நரம்பில் ஏற்றி கொண்டால் போதை வரும் என்றும், ஒரு மாத்திரை விலை ரூ.250 வீதம் வாங்கியதாக கூறினர். அவர்களுக்கு சப்ளை செய்தது யார், எங்கிருந்து வாங்கி வருகின்றனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு கூறினர்.