/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொள்ளை வழக்கில் பணப்பரிமாற்றம் திருப்பூரை சேர்ந்த 3 பேரிடம் 'கிடுக்கி'

ADDED : ஏப் 19, 2025 02:04 AM
ஆத்துார்:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மண்மலை ஊராட்சி, பாலக்காட்டை சேர்ந்த, ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வேணுகோபால், 75. இவரது வீட்டில், 20 பவுன் நகைகள், 10,000 ரூபாயை, கடந்த மார்ச், 29ல் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து தனிப்படை போலீசார், திருப்பூர், கோவையை சேர்ந்த, தனியார் 'டிடெக்டிவ்' ஏஜன்சி நடத்திய பெண் உள்பட, 10 பேரை கைது செய்தனர்.
இவர்களுக்கு தகவல், பணப்பரிமாற்றம் செய்த புகாரில், திருப்பூர், பல்லடத்தை சேர்ந்த, நவீன்குமார், 24, அஸ்வின், 24, ராஜ்குமார், 22, ஆகியோரை, திருப்பூரில் இருந்து அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கொள்ளையர்களுக்கு வழித்தடம், திருட்டுக்கு பின் போலீசாரின் நடவடிக்கைகள், பணப்
பரிமாற்றம், கொள்ளை நகைகளை மாற்றுதல் போன்ற பணிகளை செய்த, 3 பேரை பிடித்து விசாரிக்கிறோம். அவர்களுக்கு கொள்ளையில் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது' என்றனர்.