/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் மூன்று இரு சக்கரவாகனம் திருட்டு; ஒருவர் கைது
/
சேலத்தில் மூன்று இரு சக்கரவாகனம் திருட்டு; ஒருவர் கைது
சேலத்தில் மூன்று இரு சக்கரவாகனம் திருட்டு; ஒருவர் கைது
சேலத்தில் மூன்று இரு சக்கரவாகனம் திருட்டு; ஒருவர் கைது
ADDED : ஜன 07, 2025 01:57 AM
சேலம்,சேலம், தும்பாதுாளிப்பட்டி பீயபுரம் பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன், 49. இவர் கடந்த, 3 இரவு, 10:30 மணிக்கு வேலை முடித்துவிட்டு, வீட்டின் முன் ஹீரோ ேஹாண்டா பைக்கை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை, 7:30 மணிக்கு பார்த்தபோது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார், இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* சேலம், எஸ்.பாலம் அண்ணா நகர் சின்னகிரியை சேர்ந்தவர் செல்வன், 36. இவர் கடந்த, 4ல் டி.வி.எஸ் மொபட்டில், ஆட்டையாம்பட்டியில் உள்ள விசைத்தறி கூடம் சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. ஆட்டையாம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், மொபட்டை திருடியது சின்னகிரி முனியப்பன் பூஞ்சோலை காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.
* கன்னங்குறிச்சி, அய்யன்திருமாளிகையை சேர்ந்தவர் மனோஜ் குமார், 25. இவர், தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிகிறார். கடந்த, 30ல் பஜாஜ் பல்சர் பைக்கில் அஸ்தம்பட்டி அருணாசலேஸ்வரர் டீக்கடை எதிரே, வாகனத்தை நிறுத்தி விட்டு சொந்த வேலைக்காக ஒமலுார் சென்றுவிட்டு இரவு, 11:00 மணிக்கு வந்தார். அப்போது பார்த்த போது பைக் திருடப்பட்டது தெரியவந்தது. அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.