/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண், பாறை கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்
/
மண், பாறை கடத்தல் டிப்பர் லாரிகள் பறிமுதல்
ADDED : ஜூலை 21, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி வருவாய் ஆய்வாளர் பாலாஜி, நேற்று தின்னப்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடு-பட்டார். அப்போது மண் அள்ளி வந்த, டிப்பர் லாரியை நிறுத்தி விசாரித்தபோது, கடத்தி வந்தது
தெரிந்தது.
இதனால் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், பூசாரிப்பட்டி, செல்லாண்டி காலனியில் அரசு நிலத்தில் பாறை-களை உடைப்பதாக கிடைத்த தகவல்படி, ஆர்.ஐ., பாலாஜி அங்கு சென்று விசாரித்தார். தொடர்ந்து அனுமதியின்றி பாறை-களை வெட்டி ஏற்றியதால், டிப்பர் லாரியுடன் பறிமுதல் செய்தார். பின் லாரி உரிமையாளர் மீது அவர் அளித்த புகார்படி தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.