/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் நகர குறுவட்டத்துக்கு இன்று ஜமாபந்தி
/
சேலம் நகர குறுவட்டத்துக்கு இன்று ஜமாபந்தி
ADDED : ஜூன் 21, 2024 07:27 AM
சேலம்: சேலம் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த, 18 முதல், பனமரத்துப்பட்டி, வலசையூர், சேலம் நகரம் குறுவட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது. நேற்று கலெக்டர் பிருந்தாதேவி, மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். நேற்று முன்தினம் வரை, பனமரத்துப்பட்டி குறுவட்ட, வருவாய் தீர்வாயத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம், ரேஷன் கார்டு, வாரிசு சான்றிதழ் உள்பட, 453 மனுக்கள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3ம் நாளாக நடந்த ஜமாபந்தியில், வலசையூர் குறுவட்டத்தில், மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இன்று சேலம் நகர குறுவட்டத்துக்கு நடக்கிறது.
ஓமலுாரில் நிறைவுஓமலுார் தாலுகா அலுவலகத்தில் ஓமலுார், கருப்பூர் கிராமங்களுக்கு ஜமாபந்தி முடிந்த நிலையில், 3ம் நாளான நேற்று, தாரமங்கலம் உள்வட்டத்துக்குட்பட்ட, மானாத்தாள், மல்லிக்குட்டை, அமரகுந்தி, கருக்கல்வாடி உள்பட, 19 கிராமங்களுக்கு நடந்தது. ஜமாபந்தி அலுவலர் பொன்மணி, மக்களிடம், 357 மனுக்களை பெற்றுக்கொண்டார். அதில் உட்பிரிவு பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல் உள்பட, 5 பயனாளிகளுக்கு உடனே சான்றிதழ் வழங்கப்பட்டன. தொடர்ந்து கிராம ஆவணங்களை பொன்மணி பார்வையிட்டார். ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார், மண்டல தாசில்தார் பன்னீர் உள்ளிட்ட வருவாயத்துறையினர் பங்கேற்றனர். 3 நாட்கள் நடந்த ஜமாபந்தியில், 840 மனுக்கள் பெறப்பட்டன.பாலமலை முதியோர்மேட்டூர் வட்ட அலுவலகத்தில் நேற்று பொட்டனேரி, பாலமலை உள்வட்டங்களுக்குரிய தீர்வாயம், சேலம் உதவி கமிஷனர் மாறன்(கலால்) தலைமையில் நடந்தது. அதில், பாலமலையை சேர்ந்த, 12 முதியோர், உதவி தொகை வழங்க மனு கொடுத்தனர். மேலும் வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை தீர்க்கக்கோரி, பாலமலை மக்கள் மனு கொடுத்தனர்.ஏற்காட்டில் 40 மனுவுக்கு தீர்வுஏற்காடு தாலுகா அலுவலகத்தில், ஆர்.டி.ஓ., அம்பாயிரநாதன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. ஏற்காடு அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மனுக்களை கொடுத்தனர். 3 நாட்களில், 290 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் உடனே பரிசீலிக்கப்பட்டு கடைசி நாளான நேற்று வருமானம், இருப்பிடம், இறப்பு, வாரிசு உள்ளிட்ட, 40 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. அதேபோல் வாழப்பாடி தாலுகாவில், 3ம் நாளாக காரிப்பட்டி குறுவட்டத்தில் உள்ள, 18 ஊராட்சிகளுக்கு, ஜமாபந்தி நடந்தது. டி.ஆர்.ஓ., மேனகாவிடம், 215 மனுக்கள் வழங்கப்பட்டன.